சில ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்க உளவாளிகளால் இலக்கு வைக்கப்பட்ட கோட்டாபய - புலனாய்வுச் செய்தியாளர் (VIDEO)
அமெரிக்க உளவாளிகளால் சில ஆண்டுகளுக்கு முன்னரே கோட்டாபய இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக இலங்கையில் இருக்கும் புலனாய்வுச் செய்தியாளரும், அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய தற்போது சவுதியில் தஞ்சமடைந்துள்ள நிலையில், இதனை அமெரிக்காவே ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உகண்டாவிலிருந்து துரத்தப்பட்ட இடியமின் சவுதியில் தஞ்சமடைந்தது போலவே தற்போது கோட்டாபய ராஜபக்சவும் சவுதியில் தஞ்சமடைந்துள்ளார்.
சவுதியில் கிளர்ச்சிகளை ஏற்படுத்துபவர்கள் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்படுவார்கள் இதனால் அங்கு அமைதியான சூழல் மாத்திரமே நிலவும்,இதன் காரணமாகவே கோட்டாபய சவுதியில் தஞ்சமடைந்துள்ளார்.
இதன் பின்னணியில் செயற்படும் முக்கிய நாடு அமெரிக்கா என்பதுடன்,இன்னும் ஆறு மாதங்களில் கோட்டாபயவை அமெரிக்கா அமைதியாக நாட்டிற்குள் உள்வாங்கிக்கொள்ளும் என்பதுடன்,அவர் எங்கிருந்தாலும் அரச பாதுகாப்புடனேயே இருப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,