பரீட்சை காலப்பகுதியில் மின்வெட்டு! விளக்கமளிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு
க.பொ.த. உயர்தர பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின் துண்டிப்பு இடம்பெறுவதை தடுக்க தவறியமை தொடர்பில் நாளை (25) விளக்கமளிக்குமாறு, மின்சக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
உயர்தர பரீட்சை ஜனவரி 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளது.

இதன் காரணமாக மின்வெட்டைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு கடந்த 23 ஆம் திகதி மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்திருந்தது.
இருப்பினும் குறித்த தரப்பினர் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்காத நிலையில்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக நாளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு இரு தரப்பினருக்கும் அறிவித்துள்ளது.
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam
படு மாஸாக விஜய் வீட்டில் நடக்கும் காவேரியின் வளைபாப்பு... மகாநதி சீரியல் படப்பிடிப்பு தள வீடியோ இதோ Cineulagam
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri