இலங்கையின் பிரபல சின்னத்திரை நடிகர் கைது
பிரபல சின்னத்திரை நடிகர் உட்பட மூவர் கோகைன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிலியந்தலை, பகுதியில் உள்ள தங்குமிடமொன்றில் (Boarding Room) இருந்து 10 மில்லி கிராம் கொக்கைன் மற்றும் கஞ்சா கலந்த, 255 கிராம் 'சிப்ஸ்' (Chips)வகை போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
அனுராதபுரம் மற்றும் பிலியந்தலை பகுதிகளைச் சேர்ந்த 26 மற்றும் 28 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து அநுராதபுரத்திற்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக மத்தேகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இந்திக்க குமாரவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, பிலியந்தலை நகரின் மத்தியில் உள்ள குறித்த தங்குமிடம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதைப்பொருட்களை பெற்றுக்கொண்டு, அதை கொழும்பிலிருந்து அநுராதபுரத்திற்கு கூரியர் (Courier) சேவை ஊடாக கடத்தப்படுவது தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்கள் கெஸ்பேவ நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
அமரன் படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன், கமல்ஹாசன்... வெளிவந்த ஃபஸ்ட் லுக் Cineulagam
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam