விரைவில் கோட்டாபயவின் கைகளுக்குச் செல்லவுள்ள புதிய அரசமைப்புக்கான வரைவு நகல்!
புதிய அரசமைப்புக்கான வரைவு நகல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் விரைவில் கையளிக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளதாவது, புதிய அரசமைப்பை இயற்றும் பணி தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவானது, புதிய அரசமைப்புக்கான வரைவு நகலை விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளது.
அதன்பின்னர் பல்லினத்தன்மையை உறுதிப்படுத்தக்கூடிய புதிய அரசமைப்பை இயற்றுவதற்கான வாய்ப்பு எமக்கு உருவாகும். மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றும் உள்ளது. சகல தரப்பினரினதும் கருத்துகளை உள்வாங்கிய பின்னரே மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரச தலைமை
முடிவெடுக்கும் என்றார்.
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri