சஜித் தரப்பு முக்கியஸ்தர் ஆளும் கட்சியில் இணைவு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர் ஒருவர் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளைய தினம் எதிர்வரும் 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் நாளைய தினம் குறித்த முக்கியஸ்தர் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வரவு செலவுத்திட்ட யோசனை
வரவு செலவுத் திட்ட யோசனைகளை அமுல்படுத்துவதற்கு ஆதரவளிக்கும் நோக்கில் அவர் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அரசியல் பிரமுகர் கடந்த அரசாங்கங்கள் பலவற்றில் முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அமைச்சர் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாக கடந்த காலங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.