கோட்டாபய ராஜபக்சவை தனிமைப்படுத்தக்கூடாது! - வஜிர
நாம் கோட்டாபய ராஜபக்சவை தனிமைப்படுத்தக்கூடாது. அவரை அரவணைக்க வேண்டும். அவரால் தான் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதிப் பதவி கிடைத்தது என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
கோட்டாபய கடந்த திங்கட்கிழமை அமெரிக்கா பறப்பதற்கு முன்னர் வஜிர எம்.பி. இதனைத் தெரிவித்துள்ளார் என்று தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அரச எம்.பிக்களின் சந்திப்பு ஒன்று பத்திரமுல்லையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்ட இருவரது செயற்பாடுகள் தான் அங்கு வந்திருந்த அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
அவர்கள் தான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் எம்.பி. வஜிர அபேவர்த்தன. அவர்கள் என்ன அப்படிச் செய்தார்கள். அவர்கள் இருவரும் அனைவரிடமும் இருந்து சற்று ஒதுங்கிக்கொண்டார்கள்.
கோட்டாபயவின் காதுக்குள் வஜிர ஏதோ நீண்ட நேரமாக ஓதிக்கொண்டே இருந்தார். இருவரும் மிகவும் தீவிரமாக இரகசியம் பேசத் தொடங்கினார்கள்.
இதன்பின் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களின் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அதில் வஜிர, கோட்டாபயவைப் பற்றி இப்படிப் பேசினார்.
நாம்
கோட்டாபயவைத் தனிமைப்படுத்தக்கூடாது. அவரை அரவணைக்க வேண்டும். அவரால்தான்
ரணிலுக்கு ஜனாதிபதிப் பதவி கிடைத்தது என்றார் வஜிர - என்று அந்தச் செய்தியில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 6 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam
