ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்களுக்கு அமைச்சு பதவி வழங்க வேண்டாம்!குமார வெல்கம
ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினரும், புதிய ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான குமார வெல்கம கோரியுள்ளார்.
இது குறித்து அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள், குண்டர்கள், கொள்ளையர்கள், பொதுமக்கள் பணத்தை கையாடியதாக குற்றம் சுமத்தப்பட்ட எவருக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்க வேண்டாம் என அவர் கோரியுள்ளார்.
ஜனாதிபதிக்கு தொடர் அழுத்தம்
இவ்வாறான நபர்களை அமைச்சுப் பதவியில் அமர்த்துமாறு சில தரப்பினர் ஜனாதிபதிக்கு அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக தமக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் நன்மதிப்பினை சீர்குலைக்கும் சதித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.