அழிவின் விளிம்பில் விலாசமற்றுப்போகும் ஆபத்தில் கூட்டமைப்பு!அம்பலமாகும் உண்மை (VIDEO)
தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தின் பின்னர் தமிழ் தேசியம் என்பது முற்றுமுழுதாக மறைந்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா தெரிவித்துள்ளார்.
எமது ஐ.பி.சி தமிழின் அரசியல் நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது தமிழரசுக்கட்சியின் அங்கத்தவர்களே கட்சி தொடர்பில் கடும் விமர்சனங்களையும், தலைமைத்துவம் தொடர்பில் குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளனர்.
அந்த வகையில், தமிழரசுக்கட்சியின் தலைமைத்துவ பிரச்சினையை முற்றுமுழுதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே பொறுப்பேற்க வேண்டும்.
அதாவது 2009 ஆம் ஆண்டு கட்சி இருந்த நிலைமைக்கும் தற்போது கட்சியின் வீழ்ச்சிக்கும் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதுடன்,இருண்ட யுகத்தை நோக்கி கட்சி பயணித்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொடர்ந்து செல்லுமானால் கட்சி இருந்த இடமே தெரியாமல் கட்சியே அழிந்துபோகும் நிலை உருவாகும் எனவும் தெரிவித்துள்ளார்.