மொட்டுக்கட்சிக்குள் பிளவு!சஜித்துடன் இணையும் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் (VIDEOS)
டலஸ் அழகப்பெரும தலைமையில் இயங்கும் சுயாதீன எம். பிக்கள் குழுவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேலும் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணையவுள்ளனர் என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜீ. எல். பீரிஸின் இல்லத்துக்குக் கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று சென்றிருந்தது. அநுர பிரியதர்சன யாப்பா, பிரியங்கர ஜயரத்ன, சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே, ஜயரத்ன ஹேரத், சந்திம வீரக்கொடி, ஜோன் செனவிரட்ன ஆகியோர் இந்தக் குழுவில் இருந்தனர்.
இவர்களுடன், டலஸ் அழகப்பெரும, சரித் ஹேரத், நாலக கொடஹேவா, டிலான் பெரேரா ஆகியோர் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளதுடன், சந்திப்பின் நிறைவில், இரு தரப்பினரும் ஒருமித்த நிலைப்பாட்டுடன் செயற்பட உடன்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வழங்குகின்றது இக்காணொளி,