13 ஐ நடைமுறைப்படுத்தியே தீருவார் ரணில்! - நவீன் நம்பிக்கை
வரும் தடைகளைத் தகர்த்தெறிந்து அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முழுமையாக அமுல்படுத்தியே தீருவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
அரசியல் பின்னடைவு
"அரசியல் ரீதியில் தனக்குப் பின்னடைவு ஏற்படும் என்ற போதிலும் அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஜனாதிபதி உறுதியாக இருக்கின்றார்.
அதிகாரப் பகிர்வு விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பவர்தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. இதனால் சிறுபான்மையின மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் நிலைப்பாடுகளும் மாறி வருகின்றன.
தமிழ், முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தபட வேண்டும். இது
அத்தியாவசிய காரணி என ஜனாதிபதி கருதுகின்றார் என்றும் தெரிவித்துள்ளார்.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 22 மணி நேரம் முன்

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri
