ரணில் விக்ரமசிங்கவை உத்தியோகப்பூர்வ ஜனாதிபதியாக நாட்டு மக்கள் ஏற்கவில்லை!இராதாகிருஷ்ணன் (PHOTOS)
இன்று எல்லா அதிகாரம் இருந்தாலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தர்மத்தின் பக்கம் நிற்கவில்லை. அவர் ஏதேச்சதிகாரமாக செயற்பட்டு வருகின்றார். அவரை உத்தியோகப்பூர்வ ஜனாதிபதியாக நாட்டு மக்கள் ஏற்கவில்லை என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மலையக தொழிலாளர் முன்னணியின் நிதி செயலாளரும், கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் தலைவருமான விஷ்வநாதன் புஷ்பா தலைமையில் கொட்டகலையில் இடம்பெற்ற மலையக மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொருட்களின் விலைகள் அதிகரிப்பு
நாட்டில் இன்று வரிசை யுகம் முடிந்துவிட்டது. இயல்பு நிலை திரும்பிவிட்டது என சிலர் கூறுகின்றனர். உண்மை அதுவல்ல, பொருட்களின் விலைகள் எகிறிவிட்டன. மக்களின் கொள்வனவு சக்தி குறைந்துவிட்டது. அதேபோல எரிபொருள் உள்ளிட்டவை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தான் வழங்கப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சட்டக்கல்லூரிக்கு சென்றிருந்தவேளை, அவருக்கு எதிராக கூக்குரல் எழுப்பட்டுள்ளது. இந்நாட்டு மக்கள் அவரை உத்தியோகப்பூர்வ ஜனாதிபதியாக ஏற்கவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகின்றது.
134 நாடாளுமன்ற
உறுப்பினர்களின் ஆதரவுடன் அவர் தெரிவாகி இருந்தாலும், மக்கள் ஆணை இல்லை என்பதை
புரிந்துகொள்ள வேண்டும்.
என்னதான் அதிகாரம் இருந்தாலும் தர்மத்தின் பக்கம் நிற்பதே சரியான தீர்மானம்.
ஆனால் ஜனாதிபதி ஏதேச்சதிகாரமாக செயற்பட்டு மக்களை ஒடுக்க முற்படுகின்றார் என்றும் தெரிவித்துள்ளார்.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 4 நாட்கள் முன்
![புதுத்தொழில் தொடங்கிய முத்து.. வயிற்றெரிச்சலில் விஜயா செய்த காரியம்! சிறகடிக்க ஆசை ப்ரோமோ](https://cdn.ibcstack.com/article/f581024d-b018-48eb-acc5-84414573be7c/25-67acb61f83461-sm.webp)
புதுத்தொழில் தொடங்கிய முத்து.. வயிற்றெரிச்சலில் விஜயா செய்த காரியம்! சிறகடிக்க ஆசை ப்ரோமோ Cineulagam
![ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்ட இறந்த நபர்.., பிடித்த ஹொட்டல் பெயரைக் கேட்டதும் உயிர்பிழைத்த அதிசயம்](https://cdn.ibcstack.com/article/a7017912-bab6-4dec-b4ae-f7cb0dee280f/25-67ad988392b3a-sm.webp)
ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்ட இறந்த நபர்.., பிடித்த ஹொட்டல் பெயரைக் கேட்டதும் உயிர்பிழைத்த அதிசயம் News Lankasri
![Neeya Naana: கொன்றுவேன்... கோபிநாத் முன்பு தங்கையை கண்டித்த அக்கா! அரங்கத்தில் நடந்தது என்ன?](https://cdn.ibcstack.com/article/19c68b2f-82ec-486a-8131-35e0c9613544/25-67aca8f5b7054-sm.webp)
Neeya Naana: கொன்றுவேன்... கோபிநாத் முன்பு தங்கையை கண்டித்த அக்கா! அரங்கத்தில் நடந்தது என்ன? Manithan
![பிரித்தானியாவின் Skilled Worker Visa தகுதி பட்டியலில் இடப்பெற்றுள்ள வித்தியாசமான வேலைகள்](https://cdn.ibcstack.com/article/9f7af4bd-8989-4057-b959-5e1fd4469ae7/25-67ade20235fa6-sm.webp)