மகிந்த இன்று எடுக்கப்போகும் இறுதி முடிவு! அலரிமாளிகையில் ஒன்றுகூடவுள்ள எம்.பிக்கள்
பிரதமர் மகிந்த ராஜபக்சவை பதவி விலக வேண்டாம் என கோரி இன்று அலரி மாளிகையில் ஒரு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை 9 மணிக்கு இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அலரி மாளிகையில் ஒன்று கூடவுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தரப்பினர் இவ்வாறு பிரதமரை பதவி விலக வேண்டாம் என கோர உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், இன்றைய தினம் அலரி மாளிகையில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் பதவி விலகுவது குறித்து பிரதமர் மகிந்த இறுதித் தீர்மானம் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மக்களின் கோரிக்கைக்கு இணங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை பிரதமர் கொண்டுள்ளார் என அலரி மாளிகையின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெற்கு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
மகிந்தவின் பதவி விலகல் விவகாரம்...! அலரி மாளிகையில் இருந்து அகற்றப்படும் முக்கிய ஆவணங்கள் |