கோட்டாபய ராஜபக்ச விடயத்தில் தவறு செய்துவிட்டோம்!மனம் திறந்த பவித்ரா
அரசியல் தெரியாத கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்து அன்றொரு நாள் தவறு செய்துவிட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன பண்டாரகம அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ரணில் தொடர்பில் வெளியிட்ட தகவல்
கோட்டாபய ராஜபக்சவிற்கு அரசியல் தெரியாது என்பதினை அன்றும் சொன்னேன் இன்றும் சொல்கின்றேன். அந்த தவறுக்கு பிறகு கட்சிக்குள் பல சுயவிமர்சனத்துக்கு சென்று மீண்டும் அந்த தவறை செய்யமாட்டோம் என்ற முடிவுக்கு வந்துள்ளோம். இதன் பின்னர் அரசியல் செய்யாத ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக வரமாட்டார் என்ற முடிவுக்கு வந்தோம்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற வகையில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
