குண்டு தாக்குதல்களுக்கு சந்திரிக்கா பொறுப்பேற்க வேண்டும்! தயாசிறி கடும் குற்றச்சாட்டு
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு மைத்திரிபால சிறிசேன மீது குற்றம் சுமத்தினால், அவரது ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களுக்கு அவர் பொறுப்பேற்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கட்சியின் செயலாளர் நாயகம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க பொதுஜன பெரமுனவுடன் இணைந்து உருவாக்கிய அரசாங்கத்தின் ஆலோசகராக செயற்படும் சந்திரிகா பண்டாரநாயக்க மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் வாழ்க்கையை அழிக்கும் சதியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் ரணில், சந்திரிகா உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிட தயாராகி வரும் நிலையில், மேற்குலக சார்பற்ற இடதுசாரி சக்தியை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பங்களிப்புடன் உருவாக்கப்போவதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 57 நிமிடங்கள் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
