தங்குவதற்கு இடமின்றி பிச்சைக்காரனாக மாறியுள்ளேன்! நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்ட தகவல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தனது கிராமமான அம்பாறையிலிருந்து கொழும்புக்கு வருவதற்கு எரிபொருளுக்காக ஐம்பத்தைந்தாயிரம் ரூபாவினை செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அம்பாறை மாவட்டத்தில் இரண்டு இடங்களுக்கு சென்றால் 75,000 ரூபா எரிபொருளுக்கு செலவிடப்படுவதாகவும், அந்த வீடுகளின் தூரம் சில சமயங்களில் இருநூறு கிலோ மீட்டரை தாண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எரிபொருளுக்காக ஐம்பத்தைந்தாயிரம் ரூபா செலவு
எனவே , நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயணத்திற்கான எரிபொருள் செலவுக்கு தற்போதைய கொடுப்பனவு போதாது எனவும், இதுவரை தலா 104 ரூபாவில் 600 லீற்றர் எரிபொருளுக்கு பணம் வழங்கிய போதிலும் இன்று அந்த தொகைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது வீடு எரிந்து நாசமானதால், தங்குவதற்கு இடம் இல்லாமல் பிச்சைக்காரனாக மாறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam