கோட்டாபய தொடர்பில் முக்கிய தகவலொன்றினை வெளியிட ஜனாதிபதி செயலகம் மறுப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மிரிஹான இல்லத்திற்கு செலவிடப்பட்டுள்ள பணம் தொடர்பான தகவல்களை வெளியிட ஜனாதிபதி செயலகம் மறுத்துள்ளது.
தகவலறியும் உரிமைச்சட்டத்தில் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பத்திற்கமைய, தகவல்களை வெளியிட ஜனாதிபதி செயலகத்தின் தகவல் அதிகாரியான ஜனாதிபதி செயலகத்தின் உதவிச் செயலாளர் மறுத்துள்ளார்.
இந்நிலையில், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ் ஊடகமொன்றினால் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பத்திற்கமைய,பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஜனாதிபதி செயலகம் தகவல்களை வழங்க மறுத்துள்ளதாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த விண்ணப்பம் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் 5 (1) (அ) மற்றும் 5 (1) (ஆ) (i) ஆகிய பிரிகளை காரணங்காட்டி RTI நிராகரிக்கப்பட்டுள்ளது.

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam
