பொலிஸ் சேவையில் இணைய சந்தர்ப்பம்: வர்த்தமானி வெளியீடு
போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு எதிரான வேலைத்திட்டத்துடன் இணைந்து 100 உப பொலிஸ் பரிசோதகர்கள் உட்பட 500 பொலிஸ் உத்தியோகத்தர்களை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 100 பொலிஸ் உத்தியோகத்தர்கள், 370 பொலிஸ் பாதுகாவலர், 30 பொலிஸ் சாரதிகள் பணிக்கு அமர்த்தப்படவுள்ளனர்.
இதற்கமைய, நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நவம்பர் முதல் பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள் எனவும், அவர்களுக்கு ஒரு வருடம் மற்றும் 8 மாத கால அடிப்படையில் பயிற்சி அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள்
மேலும், பயிற்சி பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த, பிரதி பொலிஸ் மா அதிபர் எச்.சி.ஏ. ஆட்சேர்ப்பு பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குணதிலக்க தலைமையில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |