பொலிஸ் அதிகாரியை துப்பாக்கியால் சுட முயற்சி! பொலிஸ் சார்ஜண்ட் தப்பியோட்டம்
கொழும்பின் புறநகர் மாலபே பொலிஸில் கடமையாற்றும் சார்ஜன்ட் தர பொலிஸார் ஒருவர், போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியை துப்பாக்கியால் சுட முயற்சித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாலபே பொலிஸ் நிலையத்தில் இந்தச் சம்பவம் கடந்த 15ம் திகதி நடைபெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
வாய்த்தர்க்கம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தேடுதல் நடவடிக்கை தீவிரம்
எனினும் பொலிஸ் நிலையத்தில் இருந்த ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் நிலைமையைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.
இந்தநிலையில் துப்பாக்கியால் சுட முயற்சித்த பொலிஸ் அதிகாரி அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தப்பியோடி தலைமறைவாக உள்ள அவரைத் தேடிக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri
