கோட்டாபயவின் நம்பிக்கைக்குரிய நபர் இவர் தான்....! பின்னடைவை நோக்கி நகரும் பசில்
இலங்கையின் நெருக்கடி அரசியல் களத்தில் பசிலை காட்டிலும் கோட்டாபயவின் நம்பிக்கை வென்றவராக நிதியமைச்சர் அலி சப்ரி விளங்குகிறார் என்று அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகியுள்ளன.
ஆளும் கட்சிக்குள்ளேயே பசில் ராஜபக்சவுக்கு ஏற்பட்டுள்ள நிலை பாரதூரமானது என்றும் கருதப்படுகிறது.
ஏழு மூளைகளை கொண்டிருக்கிறார் என்று கூறப்பட்ட பசில் ராஜபக்ச, இறுதியில் நிதி விடயங்களில் தோல்வியை தழுவியுள்ளதாகவே கருதவேண்டியுள்ளது.
இது அவரின் கட்சி மட்ட செல்வாக்கை பாதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் பத்தரமுல்லையில் உள்ள அவரது வீட்டுக்கு முன்னால் எதிர்ப்பாளர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக அண்மையில் அவரை விமானப்படை வீரர்கள் பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு அழைத்துச் செல்லும் நிலை ஏற்பட்டது.
அவரது நண்பர் ஒருவரின் கருத்துப்படி ஏற்கனவே நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது பசில் ராஜபக்சவுக்கு ஏற்பட்ட செல்வாக்கற்ற நிலை தற்போது ஆளும் கட்சிக்குள்ளேயே ஏற்பட்டுள்ளது.
இதேவேளை அமைச்சர் அலி சப்ரி, தமக்கு வழங்கப்பட்ட நிதியமைச்சு பொறுப்பில் இருந்து முன்னதாக விலகியமைக்கு குடும்ப அழுத்தமும், இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடி தொடர்பில் எதிர்காலத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் தொடர்பில் தாம் விமர்சனங்களுக்கு உள்ளாகவேண்டியேற்படும் என்று ஆங்கில ஊடகம் ஒன்று கூறியுள்ளது.
அத்துடன் ஏற்கனவே கொரோனாவினால் மரணமான முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரியூட்டப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பதவி விலகுவதாக கூறியபோதும் பின்னர் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு இணங்க அந்த பதவியை தொடர்ந்த சந்தர்ப்பங்களும் சுட்டிக்காட்டப்படுகின்றன.
அதேபோன்று தற்போதும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கோரிக்கைக்கு இணங்க அவர் இறுதியில் அதனை ஏற்றுக்கொண்டு சர்வதேச நாணய நிதியத்துடனான சந்திப்புக்கும் தயாராகி வருகிறார்.
இதுவும் பசில் ராஜபக்சவுக்கு பாரிய பின்னடைவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri
