எங்களது ஜீவனோபாயத்தை அழிப்பாதா? போராட்டத்தில் குதித்த மக்கள்
கோராவெளி, வட்டவான் போன்ற கிராமங்களிலுள்ள விவசாய காணிகளில் வனவளத் தினைக்களத்தினால் அத்துமீறி மேற்கொள்ளப்பட்ட மரநடுகையை கண்டித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்க்கொண்டு வருகின்றனர்.
மேற்படி போராட்டமானது கோரளைபற்று தெற்கு கிராண் பிரதேச செயலகத்துக்கு முன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதுதொடர்பில் பலமுறை, அரசியல்வாதிகளுக்கும் அரச அதிகாரிகளுக்கும் முறைப்பாடு செய்தபோதும் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. இந்நிலையிலேயே மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரிடம் வினாத்தொடுக்கும் வகையில் “எங்களது ஜீவனோபாயத்தை
அழிப்பாதா? உங்களது கிழக்கு மீட்பு” என எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.







