நாட்டை மீண்டும் முடக்குவதே எதிரணியின் திட்டம்: நாலக்க பண்டார எம்.பி. குற்றச்சாட்டு
நாட்டில் மீண்டும் ஒரு கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை ஏற்படுத்தி நாட்டைச் செயலிழக்கச் செய்வதற்கே எதிர்க்கட்சி விரும்புகின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாலக்க பண்டார கோட்டேகொட (nalaka-bandara-kottegoda) தெரிவித்துள்ளார்.
மாத்தளை, கோட்டுவ வீதி அபிவிருத்திப் பணியை நேற்று ஆரம்பித்த வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "ஒரு இலட்சம் வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த வீதியானது 8.29 மில்லியன் ரூபா செலவில் காபட் வீதியாகப் புனரமைக்கப்படவுள்ளது.
தற்போதைய அரசு மக்களின் துயரங்களை நன்கு உணர்ந்துள்ளது. சில பிரச்சினைகளுக்கு மிகக் குறுகிய காலத்தில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்.
மாத்தளை மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகள் பல வருடங்களாக ஸ்தம்பிதம் அடைந்திருந்த நிலையில் தற்போதே சரியான பாதையில் செல்கின்றது.
இவ்வாறான அபிவிருத்திப் பணிகளை நிறுத்திவிட்டு நாட்டு மக்களைப் பிரச்சினைக்குள் தள்ள வேண்டும் என்பதே நாட்டின் பிரதான எதிர்க்கட்சியின் நோக்கமாகும்" எனத் தெரிவித்துள்ளார்.
