பெரிய வெங்காய அறுவடையில் வீழ்ச்சி
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், சிறு போகத்தில் உள்ளூர் பெரிய வெங்காயத்தின் அறுவடை 10 இலட்சம் கிலோ கிராமினால் குறைவடைந்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் இக்காலப் பகுதியில் பொருளாதார மத்திய நிலையத்திற்கு நாளாந்தம் 10 முதல் 15 இலட்சம் கிலோகிராம் வரையான பெரிய வெங்காயம் அறுவடை கிடைத்ததாகவும் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வர்த்தக சங்கத்தின் தலைவர் சாந்த ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
வெங்காயத்தின் உற்பத்திச்செலவு
எனினும், இந்த தடவை சுமார் 2 இலட்சம் கிலோ கிராம் பெரிய வெங்காயம் மாத்திரமே தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு நாளாந்தம் கிடைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் உற்பத்திச் செலவு 250 ரூபாவாக காணப்படுகின்ற நிலையில், விவசாயிகளுக்கு ஒரு கிலோ கிராமிற்கு 80 தொடக்கம் 120 ரூபா வரையே கிடைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
