இலங்கையில் எரிபொருளுக்கும் கறுப்புச் சந்தை உருவாகலாம் : சாணக்கியனின் எதிர்வுகூறல்
இலங்கையின் ஜனாதிபதிகள் மற்றும் அரச தலைவா்கள் வெளிநாடுகளுக்கு வழங்கிய உறுதிமொழிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எனவேதான், அபிவிருத்தி அடைந்த நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வருவதில்லை என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் சாணக்கியன் தொிவித்துள்ளாா்.
இனப்பிரச்சனை தொடா்பாக நாட்டின் முன்னைய தலைவா்கள், உறுதிமொழிகளை வழங்கினா். எனினும் அது எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என்றும் அவா் சுட்டிக்காட்டியுள்ளாா்.
நாடாளுமன்றத்தில் இன்று உரை நிகழ்த்திய அவா்,
நாடு இன்று பாாிய பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் பருவநிலை மாநாட்டுக்கு சென்றிருந்த இலங்கையின் ஜனாதிபதி, சேதனப்பசளைகளை பயன்படுத்தி இயற்கை விவசாயத்தை நடைமுறைப்படுத்தும் முதல் நாடாக இலங்கையை மாற்றப்போவதாக தொிவித்திருந்தாா்.
எனினும் இயற்கை விவசாயத்தை இலங்கையில் முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்று அனைவருக்கும் தொியும். எனவே இது உண்மையில் கேலிக்குாிய விடயமாக உள்ளதாக சாணக்கியன் குறிப்பிட்டாா்.
கொள்கை ரீதியான செயற்பாடுகள் தொடா்பில் அண்மையில் ஜனாதிபதி கழுத்தை பிடிப்பது குறித்த கருத்தை வெளியிட்டிருந்தாா்.
எனினும் இலங்கை மக்கள் இறுதியாக இந்த அரசாங்கத்தை கழுத்தை பிடித்து அனுப்பி வைக்கப்போவதாக சாணக்கியன் குறிப்பிட்டாா்.
ஏனெனில் பசளை பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் மாத்திரமன்றி, பொதுமக்களும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். எனவே அவா்கள், இறுதியில் அரசாங்கத்தை கழுத்தை பிடித்து வெளியில் தள்ளுவா் என்று நாடாளுமன்ற உறுப்பினா் கூறினாா்.
இலங்கையில் தற்போதைய நிலையில் டொலா் இருப்பு 2 பில்லியன் அளவிலேயே உள்ளது. எனவே எதிா்காலத்தில் இறக்குமதிகளில் பாாிய பிரச்சனை ஏற்படும். இலங்கையில் டொலர் பிரச்சினை, பசளைப்பிரச்சினை தொடா்கின்ற நிலையில் அடுத்து எாிபொருள் பிரச்சினை எதிர்பாா்க்கப்படுகிறது. இதன்போது எாிபொருளுக்கும் கறுப்புச்சந்தை உருவாக்கப்படலாம் என்றும் சாணக்கியன் குறிப்பிட்டாா்.
நாட்டின் இயற்கை விவசாயத்தை நடைமுறைப்படுத்தும்போது நட்டம் ஏற்பட்டால் நட்டஈட்டை தருவதாக மட்டக்களப்பில் சிலர் கூறியுள்ளனா்.
இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது. இந்த நட்டஈடு, மெதமுலன்ன அல்லது ராஜபக்சர்களிடம் இருந்து தரப்படப்போவதில்லை.
நாட்டின் வாிசெலுத்துவோாின் பணமே நட்டஈடாக தரப்படப்போகிறது என்று சாணக்கியன் குறிப்பிட்டாா்.
இந்த சூழ்நிலையில் இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கமுடியாது என்று நிபுணா் கூறியுள்ளதாகவும் அவா் தொிவித்தாா். அத்துடன் வங்கிமுறையில் பிரச்சனை ஏற்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.
ஒரே நாடு ஒரு சட்டம் தொடா்பில் கருத்துரைத்த அவா், பொதுமகனை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட மட்டக்களப்பு காவல்துறை உறுப்பினா் ஒருவா் பதவிநீக்கம் செய்யப்பட்டாா்.
எனினும் சப்ரகமுவயில் பொதுமகனை தாக்கிய அதிகாரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது. இதுவே நாட்டில் இருக்கின்ற ஒரே நாடு ஒரே சட்டமாகும் என்று சாணக்கியன் குறிப்பிட்டாா்.
பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து கருத்துரைத்த அவா், தமிழ் இளைஞா்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டாா்.
அதேநேரம் உயிா்த்த ஞாயிறு தாக்குதல் தொடா்பில் சந்தேகத்தில் பல முஸ்லிம் இளைஞா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். எனினும் அது தொடா்பில் எந்தவொரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரும் கேள்வி எழுப்புவதில்லை என்றும் சாணக்கியன் தொிவித்தாா்.
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam