வியாஸ்காந்தின் அறிமுக போட்டியில் இலங்கை அணி தோல்வி
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய ரி20 போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ரி20 போட்டித் தொடரின் மூன்றாவது போட்டி ராவல்பிண்டியில் இன்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ஓட்டங்கள் மட்டுமே பெற்றுக்கொண்டது.
இலங்கை அணியின் மத்திய வரிசை துடுப்பாட்டவீரர்கள் இன்றைய தினமும் எதிர்பார்த்த பங்களிப்பினை வழங்காத நிலையில் ஓட்ட எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
இலங்கை அணியின் சார்பில் ஜனித் லியனகே 41 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதுடன் பாகிஸ்தான் அணியின் மொஹமட் நவாஸ் 3 விக்கட்டுகளை வீழ்த்தினார்.
இலகுவான வெற்றி இலக்கை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி 15.3 ஓவர்களில் வெற்றி இலக்கினை எட்டியது.
பாகிஸ்தான் அணி சார்பில் சஹிபாஸ்டா பர்ஹான் ஆட்டமிழக்காது 80 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

இலங்கை அணியின் சார்பில் துஷ்மந்த சமீர 2 விக்கட்டுகளை வீழ்த்தினார்.
இந்தப் போட்டியின் மூலம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் ரி20 சர்வதேச போட்டிகளில் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டார்.
முதல் போட்டியில் வியாஸ்காந்த் 4 ஓவர்கள் வீசி 28 ஓட்டங்களைக் கொடுத்திருந்தார்.
இந்த முத்தரப்பு தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் இரண்டிலும் தோல்வியைத் தழுவிய இலங்கை மிகவும் நெருக்கடியான நிலையை எதிர்நோக்கியுள்ளது.
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri