தேர்தல் ஆணைக்குழுவுக்கு எதிர்க்கட்சிகள் கூட்டாக அனுப்பியுள்ள முக்கிய கடிதம்
உள்ளூராட்சி மன்றத்தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அனைத்து முக்கிய கட்சிகளும் இணைந்து கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றினை இட்டு அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
எதிர்க் கட்சி தேர்தல் ஆ குழுவிற்கு:
— M A Sumanthiran (@MASumanthiran) March 5, 2023
“சட்டப்படி தேர்தலை நடத்துவதற்கு இருந்த ஓரேயொரு தடையை உயர் நீதிமன்றம் இப்போது நீக்கியுள்ளதால், மார்ச் 19, 2023 இற்கு முன்னதாக இத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இது சம்பந்தமாக திறைசேரி செயலாளருடனோ வேறு எவருடனுமோ நீங்கள் கலந்துரையாடத் தேவையில்லை…”
எதிர்வரும் மார்ச் 19 அல்லது அதற்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அனைத்து முக்கிய கட்சிகளும் கூட்டாக இந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
எதிர்க்கட்சியில் அங்க வகிக்கும் அனைத்து, கட்சிகளினதும் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட சில நாடளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக கையொப்பமிட்டு இந்த கடிதத்தினை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பியுள்ளதாகவும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கையை ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் விடுத்துள்ளன.
மேலும், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை, நாளை மறுதினம் (7) காலை 9 மணிக்கு தேர்தல்கள் செயலகத்தில் சந்திக்க விரும்புவதாகவும் எதிர்க்கட்சிகள் அந்த கடிதத்தில் கோரியுள்ளன.
You my like this video

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
