உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேவையான நிதியை விடுவிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேவையான நிதியை விடுவிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, நிதியமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகளை நாளைய தினம் கலந்துரையாடலுக்கு அழைக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
அஞ்சல்மூல வாக்களிப்பை முன்னர் திட்டமிடப்பட்ட திகதிகளில் நடத்துவதற்கு முயற்சிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக வரவிருக்கும் உள்ளாட்சித்தேர்தல் தொடர்பான அச்சுப்பணிகளை உரிய நிதியில்லாமல் மேற்கொள்ள முடியாது என்று தேர்தல் ஆணையத்துக்கு அரசு அச்சகமா அதிபர் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
வாக்குச்சீட்டுகள் விநியோகம்
எவ்வாறாயினும், தவிர்க்க முடியாத காரணங்களால் 2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தலின் அஞ்சல்மூல வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டுகள் திட்டமிட்டபடி பெப்ரவரி 15ஆம் திகதியன்று விநியோகிக்கப்படாது என தேர்தல் ஆணைக்குழு நேற்று அறிவித்தது.
இந்தப் பின்னணியில், நிதியமைச்சக அதிகாரிகளை வரவழைத்து, நிதி ஒதுக்கீடு குறித்து விவாதிக்க தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.
இதற்கிடையில், இந்தப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண
முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அது பலனளிக்காவிட்டால் சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் எச்சரித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam
