பசில் ராஜபக்சவிற்கு பிரயோகிக்கப்படும் கடும் அழுத்தம்! நாளை வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு
உள்ளாட்சி தேர்தல் திட்டமிட்ட திகதியில் நடத்தப்படுமா இல்லையா என்பது குறித்து நாளை தினம் ( 8 ஆம் திகதி ) அறிவிக்கப்படும் என அரசாங்க வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, சாகர காரியவசம் உள்ளிட்டோர் கடந்த 1ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
தேர்தல் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு
இதன்போது, தேர்தல் குறித்து அரசாங்கத்தின் சரியான நிலைப்பாட்டை அறிவிக்குமாறு பிரதமரிடம் பசில் ராஜபக்ச கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் 8 ஆம் திகதி ஆளும் கட்சி ஒன்று கூடும் எனவும், ஆளும் கட்சியின் சரியான தீர்மானத்தை அறிந்து அதனைத் தமக்கு அறிவிக்கத் தயார் எனவும் பிரதமர் பசில் ராஜபக்சவிடம் அப்போது உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமராகவும், உள்ளூராட்சி அமைச்சராகவும் தினேஷ் குணவர்தன செயற்படுவதால் தேர்தலை நடத்துவது குறித்து முடிவெடுக்கும் முழு உரிமை உள்ளதாகவும், இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் கருத்து அவசியமானது எனவும் பசில் ராஜபக்ச பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் வலியுறுத்தியுள்ளார்.
பசில் ராஜபக்சவிற்கு கடும் அழுத்தம்
தேர்தலை சிறிது காலத்திற்கு ஒத்திவைக்குமாறு மாவட்ட அமைப்பாளர்கள் குழுவொன்று முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் கோரியுள்ளதாகவும்,இருப்பினும் தான் தலையிட முடியாது என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும், தாம் எதிர்கொள்ளும் அழுத்தங்கள் காரணமாக தேர்தல் தொடர்பான நிலைப்பாட்டை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் பசில் ராஜபக்ச கோரியுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும், பசில் ராஜபக்ச அணி தேர்தலுக்கு தயார் நிலையில் இருப்பதாகவும், பிரச்சார நடவடிக்கைகளின் முதல் சுற்று கம்பஹா மற்றும் குருநாகலில் இருந்து ஆரம்பமாகவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
