ரணிலின் '13' உறுதிமொழி மக்களை ஏமாற்றும் சூழ்ச்சி! - ஜே.வி.பி. குற்றச்சாட்டு
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய உறுதிமொழி மக்களை ஏமாற்றும் தந்திரம் என்று ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.
எரியும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பதில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப ஜனாதிபதி முயற்சித்து வருகின்றார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொருளாதார நெருக்கடி
"நாடு முழுவதும் உள்ள மக்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து பேசிக் கொண்டிருந்தனர். எனினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே மீண்டும் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான இந்த உரையாடலை ஆரம்பித்தார்.
எனவே, அவரின் இனவாதச் சூழ்ச்சிகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
ஜனாதிபதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து இடையூறு
விளைவித்து வருகின்றார்.
தற்போது தேர்தல் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. தேர்தலை நிறுத்தினால் பண
விரயமே ஏற்படும்" - என்றார்.





ஜனனி கேட்ட கேள்வி, குணசேகரனுக்கு தெரியவந்த ஜீவானந்தம் நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

சவால் விட்ட ஜனனி, ஆனால் காத்திருந்த பெரிய அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan
