உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் தந்தை மீது கொடூர தாக்குதல்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் தந்தையை பதவி விலகுமாறு கடத்திச் சென்று கம்பத்தில் கட்டி வைத்துள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து கபிதிகொல்லேவ உள்ளூராட்சி சபைக்கு வேட்புமனுவை சமர்ப்பித்துள்ள வேட்பாளர் ஒருவரின் தந்தையே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

மேலும், ஐந்து பேர் கொண்ட கும்பல் தனது வீட்டிற்கு இரவில் வந்து மின்சாரத்தை துண்டித்து,வேட்பாளரின் தந்தையை வீட்டின் பின்புறமுள்ள தண்ணீர் தொட்டியில் உள்ள கம்பத்தில் கட்டிவைத்துள்ளதாகவும் முறைப்பாட்டாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னர் அக்கம்பக்கத்தினர் அந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கபிதிகொல்லேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam