இலங்கையில் போலிப் பிரசாரத்தைக் கட்டுப்படுத்தச் சட்டம்!
இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் ஊடான போலிப் பிரசாரங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய சட்டத்தைக் கொண்டு வர அரசு தயாராகி வருகின்றது.
அதற்கமைய நீதி அமைச்சு மற்றும் வெகுசன ஊடக அமைச்சு இணைந்து சட்டக் கோவை ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது எனத் தெரியவருகின்றது.
இந்த வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமூகங்களுக்கு இடையே குரோதத்தை ஏற்படுத்தும் மற்றும் வெறுப்புணர்வுகளைத் தூண்டும் வகையிலான பிரசாரங்களை முன்னெடுத்தல், இரு நாடுகளுக்கு இடையிலான உடன்படிக்கைகள் மற்றும் நட்புறவுச் செயற்பாடுகள் குறித்து பொய்யான பிரசாரங்களைப் பரப்புதல், இனவாத, மதவாத கருத்துக்களைப் பரப்புதல், நிதி விடயங்களில் பொய்யான கருத்துக்களைப் பரப்புதல் உள்ளிட்ட விடயங்களில் கட்டுபாடுகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனக் கூறப்படுகின்றது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 19 மணி நேரம் முன்

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
