வலி. மேற்கு பிரதேச சபையின் பாதீடு18 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
வலி.மேற்கு - சுழிபுரம் பிரதேச சபையின் 2022ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 18மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டமானது தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் தலைமையில் இன்று காலை, சபையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது, தவிசாளரால் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டதுடன் வரவு செலவுத்திட்டத்தின் மீதான விவாதங்கள் இடம்பெற்றன.
எனினும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் குறித்த பாதீட்டை ஆதரிப்பதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து பாதீடு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இந்நிலையில்18மேலதிக வாக்குகளால் 2022ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
25 உறுப்பினர்களை கொண்ட இச்சபையில் 5 உறுப்பினர்கள் கூட்டத்துக்கு சமூகமளிக்காத நிலையில் பாதீட்டிற்கு ஆதரவாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 9பேர், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் 4பேர், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் 3பேர், சுயேட்சை குழு உறுப்பினர்கள் 2 பேர் உள்ளடங்களாக 19உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
பாதீட்டிற்கு எதிராக சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் சதீஸ்வரன் வாக்களித்தார். இக்கூட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் நால்வர் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri