தொடர்ச்சியாக மணல் அகழ்வு: அம்பன் பிரதேச மக்கள் கண்டனம் (VIDEO)
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு அம்பன் கிராம சேவகர் பிரிவிலுள்ள கொட்டோடை கிராமத்தில் மணல் அகழ்வு மேற்கொள்வதற்கான வேலைகள் தற்போது இடம்பெற்று வரும் நிலையில் தாம் அதனை எதிர்ப்பதாக அம்பன் கிழக்கு மக்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறுகையில்,
கடந்த காலங்களில் குறிப்பாக, 2009ம் ஆண்டிலிருந்து 2015ம் ஆண்டுவரை எமது பிரதேசத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் கணக்கில் மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் அவ்விடங்கள் சுமார் 5 தொடக்கம் 8 அடிவரை ஆழமான பாரிய நீர்த்தேக்கமாக காணப்படுகின்றன. இது எமக்கு பெரிதும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மீண்டும் எமது கிராமத்தில் மணல் அகழ்வு நடவடிக்கைகளை, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் ஊடாக மாவட்ட செயலர், வடமாகாண ஆளுநர் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு நாம் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தி வருகின்றோம் என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
