இந்தியாவின் பாதுகாப்பில் இலங்கை கரிசனை கொண்டுள்ளது: அமைச்சர் அலி சப்ரி
இந்தியாவின் பாதுகாப்புக்கு பிரச்சினை ஏற்படுத்தும் எந்தவொரு செயற்பாட்டுக்கும் இடம் தரப்படமாட்டாது என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பின் கரிசனையை இலங்கை புரிந்து கொண்டுள்ளது.
இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார்.
இந்தியா ஆட்சேபிக்கவில்லை
அதேநேரம் இலங்கையின் அபிவிருத்திக்கு ஏனைய நாடுகள் உதவுவதை இந்தியா ஆட்சேபிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் அண்மைய பயணத்தின் போதும் கடந்த ஆகஸ்ட்டில் அவரை சந்தித்த போதும் இதனை ஜெய்சங்கர் வலியுறுத்தியதாக சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் அபிவிருத்திக்காக ஏனைய நாடுகள் முதலீடுகளை மேற்கொள்வதும் நிதியுதவிகளை வழங்குவதை இந்தியா ஆட்சேபிக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளதாக சப்ரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தியா, ஜப்பான் போன்று சீனாவும் இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு
உதவும் என்ற சப்ரி நம்பிக்கை வெளியிட்டார்.

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
