பொதுநலவாய செயலாளர் நாயகம் இலங்கை விஜயம்
இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின விழாவில் கலந்துகொள்வதற்காக பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லண்ட் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பொதுநலவாய செயலகம் தெரிவித்துள்ளது.
பெப்ரவரி 4 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் செயலாளர் நாயகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புவிசார் அரசியல் வரைபடம் தொடர்பில் விரிவுரை
இந்த நிலையில் நாட்டிற்கான ஐந்து நாள் பயணத்தில், அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மரியாதை நிமித்தமாகச் சந்திக்கவுள்ளார்.
அத்துடன் பெப்ரவரி 3 வெள்ளிக்கிழமையன்று, கடல்சார் சிந்தனைக் களஞ்சியமான புவிசார் அரசியல் வரைபடத்தில் விரிவுரை ஆற்றவுள்ளார் .
செயலாளர் நாயகம் பெப்ரவரி 1ஆம் திகதி புதன்கிழமை இலங்கை வந்து 2023 பெப்ரவரி
5 ஞாயிற்றுக்கிழமை நாட்டில் இருந்து புறப்படவுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் News Lankasri

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan
