குளுக்கோமீட்டரை வாங்க தயங்கும் இலங்கை சுகாதார அமைச்சு
இந்திய கடன் உதவியின் கீழ் சுகாதார அமைச்சுக்கு குளுக்கோமீட்டர்களை கொள்வனவு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய சுகாதார செயலாளர் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய கடன் உதவியின் கீழ் 38 கோடி ரூபா பெறுமதியான குளுக்கோமீட்டர்களை கொள்வனவு செய்ய டெண்டர் கோரப்பட்டதாகவும், கடன் வழங்கும் முறை முடிவுக்கு வந்துள்ளதால், குளுக்கோமீட்டர்களை கொள்வனவு செய்வதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குளுக்கோமீட்டர் டெண்டர் இரத்து
இந்திய கடன் உதவி முடிவடைந்துள்ளதால் குளுக்கோமீட்டர் டெண்டரை இரத்து செய்து புதிய டெண்டர் கோர வேண்டும் என சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் ஜனவரி மாதம் முறையான டெண்டர் நடைமுறையின் மூலம் குளுக்கோமீட்டர்கள் கையிருப்பு பெறப்படும் என்பதால் திடீரென 38 கோடி ரூபாய் செலவழித்து குளுக்கோமீட்டர் வாங்குவது சிக்கலாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.