சொந்த வீட்டில் தங்க முடியாத நிலையில் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள்! தீவிரமடையும் போராட்டம் (VIDEO)
அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்ற பின்னணியில் சொந்த வீட்டில் தங்க முடியாத நிலையில் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் ஒளிந்து வாழும் நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் வங்கி முகாமையாளரும்,பொருளியல் முகாமைத்துவ முதுமாணி பட்டத்தாரியுமான குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கெதிரான தீவிரமடைந்துள்ள மக்கள் போராட்டம் தொடர்பில் எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை ஜனாதிபதியினால் ஆகக்குறைந்தது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க கூட முடியாத நிலையில்,எங்கு இருக்கின்றோம் என்பதினை கூட சொல்ல மறுத்து மறைந்து வாழ்கின்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
இதேப்போன்று அரசு சார்ந்த முக்கியஸ்தர்களும் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் மாற்றம் வருகின்றதோ இல்லையோ மக்கள் அதளபாதாளத்திற்கு சென்றுள்ளனர்.
இதன் காரணமாகவே மக்கள் தற்போது அரசுக்கு எதிராக வீதிக்கு இறங்கியுள்ளனர்.
மேலும் அடுத்து வரும் ஆறு மாத காலங்கள் மிக கடுமையான காலம் என்றும் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




