எரிபொருள் நிரப்ப வருபவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
எரிபொருள் நிரப்புவதற்கான கடைசி எண்ணுடன் பொருந்தாத (ஒற்றை மற்றும் இரட்டை) எண்களை கொண்ட வாகனங்கள் உடனடியாக வரிசையிலிருந்து அகற்றப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் எஃப். யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
ஒரே நாளில் சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு ஒற்றை மற்றும் இரட்டை எண்கள் கொண்ட வாகனங்கள் வருவதாக தெரியவந்துள்ளது.
பொலிஸாருக்கு உத்தரவு
எனவே, திகதியுடன் பொருந்தாத வாகனங்கள் எரிபொருள் நிரப்ப வந்திருப்பது கண்டறியப்பட்டால், எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்குள் நுழைவதற்கு முன்பு அவற்றை அகற்றுமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எரிபொருள் வரிசைகளில் தேவையற்ற மோதல்களை ஏற்படுத்திய 05 நபர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே, மக்கள் தேவையற்ற மோதல்களை ஏற்படுத்தாமல், உரிய திகதியில் கியூஆர் (QR) மற்றும் கடைசி எண்ணின்படி எரிபொருள் நிரப்புமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.