வாகன உதிரிபாகங்களை திருடிய சந்தேகநபரை மின் கம்பத்தில் கட்டித்தொங்கவிட்ட மக்கள் (VIDEO)
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக மக்கள் நாளாந்தம் வரிசைகளில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மக்கள் ஏதாவதொரு வகையில் எரிபொருளினை பெற்றுக்கொள்ள பல்வேறு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் காணொளிகள் நாளாந்தம் வெளியாகிய வண்ணம் உள்ளது.
அந்த வகையில், ராஜகிரிய - ஒபேசேகர பகுதியில் எரிபொருள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் எரிபொருள் மற்றும் உதிரிபாகங்களை திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியொன்று மின் கம்பத்தில் கட்டித் தொங்க விடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக ஒபேசேகரபுர பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு வெளியே எரிபொருளுக்காக வாகனங்களுக்குள் காத்திருக்கும் போது கார் உதிரிபாகங்கள் மற்றும் எரிபொருள் திருட்டு நடவடிக்கைக்காக பயன்படுத்திய முச்சக்கர வண்டியொன்றே இவ்வாறு மின்கம்பத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளது.

கேம் சேஞ்சர் ஓடாதுனு முன்பே தெரியும்.. மிகப்பெரிய நஷ்டம்: ஷங்கரை தாக்கிய தயாரிப்பாளர் தில் ராஜு Cineulagam

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri
