சட்டவிரோதமாக டீசலை பதுக்கி வைத்திருந்த ஒருவர் கைது (PHOTOS)
புத்தளம் - தில்லையடி பகுதியில் டீசல் எரிபொருளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த சந்தே நபரொருவர் புத்தளம் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
டீசலை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருப்பதாக புத்தளம் பொலிஸாருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பதுக்கி வைத்திருந்த 35 லீற்றர் டீசல் எரிபொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தில்லையடிப் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரொருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும், கைப்பற்றப்பட்ட டீசலையும் நாளை புத்தளம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.









6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
