எரிசக்தி அமைச்சர் முன்வைத்த கோரிக்கைக்கு சம்பிக்க ரணவக்க பதில்
எரிபொருள் கொள்வனவுகளை கண்காணிக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவராக, செயல்படுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, எரிபொருள் கொள்வனவுகளில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் புதிய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமென தெரிவித்தார்.
இந்த குழுவிற்கு எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் தலைமை தாங்க வேண்டும் என தெரிவித்த அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க அந்த பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணை
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைக்கு பதிலாக முறையான விசாரணையை மேற்கொள்வதற்கு கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்திற்கு தேவையான வசதிகளை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரணவக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் சிலோன் பெற்றோலிய சேமிப்பு முனையங்கள் லிமிடெட் ஆகியவற்றின் செயற்பாடுகள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் ரணவக்க அண்மையில் கோரிக்கை விடுத்தார்.
எனவே அவர் இந்த தெரிவுக்குழுவுக்கு தலைவராக வேண்டும் என அமைச்சர்
தெரிவித்தார். இதன்போதே பாட்டலி சம்பிக்க ரணவக்க, தமது இசைவை வெளியிட்டார்.