எரிபொருள் தட்டுப்பாடு! மூதூர் பிரதேச செயலகத்தினால் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் (PHOTOS)
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் எதிர்நோக்கி வரும் போக்குவரத்து பிரச்சினையை ஓரளவு சீர் செய்யும் நோக்கத்தில் மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாரக், தலைமையில் இன்று கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில், வலய கல்வி பணிப்பாளர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,உதவி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், மூதூர் போக்குவரத்து சபையின் முகாமையாளர் மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவையின் நேரக்காப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

குறித்த கலந்துரையாடலின் போது இலங்கத்துறை முகத்துவாரத்தில் இருந்து வருகின்ற பேருந்துகள் தோப்பூர் பிரதேசத்தின் ஊடாக வருவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளல், பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை நேரத்திற்கு பேருந்து சேவையினை ஏற்பாடு செய்தல், நோயாளர்களை பார்வையிடுவதற்காக வருகின்ற பொதுமக்களுக்கு பேருந்து சேவையினை ஒழுங்குப்படுத்தல். பேருந்து நிறுத்துமிடத்தில் ஏற்படும் இடர்பாடுகளை போக்குவரத்து பொலிஸாரின் உவியைகொண்டு சீர் செய்தல் போன்ற தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.

இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam