எரிபொருள் விநியோகம் தொடர்பில் இந்துக்குருமார்கள் விடுத்துள்ள கோரிக்கை
எரிபொருள் நிலையத்தில் இந்துக்குருமார்களுக்கு ஒரு நேரத்தினை ஒதுக்கி எரிபொருள் நிரப்ப ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடமராட்சி - துன்னாலை ஆலயத்தில் இந்து குருமார்கள் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
வடமராட்சியில் உள்ள பல்வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தமக்கென ஒரு நேரம் ஒதுக்கி தருமாறும் கோரிக்கை விடுக்கின்றோம். குருமார்கள் எல்லோரும் எத்தனையோ ஆலயங்களுக்கு பூஜை செய்து வருகின்றோம்.

கடந்த காலங்களில் கோவிட் காலத்திலும் ஆலயங்கள் பூட்டுப்படாமல் பூஜை செய்து வந்தோம். தற்போது பெட்ரோல் பிரச்சினை. நாங்கள் இங்கிருந்து நாகர்கோவில் உட்பட்ட வடமராட்சி கிழக்கில் பல பிரதேசங்களுக்கும் மோட்டார் சைக்கிளில் சென்று பூஜை செய்து வருவதற்கு ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் தேவைப்படுகின்றது.
இந்த சூழ்நிலைல் பெட்ரோல் நிரப்பு நிலையங்களுக்கு நாங்கள் செல்கின்ற போதும் குருமார்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் இல்லை. பொலிஸாரும்,இராணுவத்தினரும் வரிசையில் வருமாறு குறிப்பிடுகின்றார்கள். இதன் காரணமாக பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதால் உரிய தரப்பினர் தமக்கான நேரத்தை ஒதுக்கி தருமாறு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்..
ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ஜூன் 21 முதல் இந்த 3 ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி தான்! Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri