வரலாற்றில் ஒரு இக்கட்டான காலப்பகுதி! மயிரிழையில் தப்பிய விடுதலைப்புலிகளின் தலைவர் (Video)
1988 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் வரலாற்றில் ஒரு இக்கட்டான காலப்பகுதியாகும்.
இந்த காலப்பகுதியில் வன்னியில் நிலைக்கொண்டிருந்த இந்தியப் படையினர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரை குறிவைத்து பல நகர்வுகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்த நகர்வுகளுக்கு பதிலடியாக வீர யுத்தம் புரிந்த விடுதலைப்புலியினர் இந்தியப் படையினருக்கு பல சேதங்களை ஏற்படுத்தி வந்தனர்.
இதன்போது இந்தியப் படையினரிடமிருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மயிரிழையில் தப்பிய பல சம்பவங்களும் அந்த முற்றுகையின் போது நடந்திருந்தன.
இந்தியப் படையினர் தன்னைச் சுட்டுக்கொலைசெய்யும் ஒரு நிலை ஏற்பட்டால் தனது பிணம் கூட இந்தியப்படையினரிடம் அகப்படக்கூடாது என்பதற்காக, ஒரு மெய்ப்பாதுகாவலர் ஒருவரை பெட்ரோல் 'கானு'டன் எந்த நேரமும் தன்னருகே வைத்திருக்கும் அளவிற்கு நெருக்கடி கொடுத்த முற்றுகை இதுவென்றும் கூறப்படுகின்றது.
இக்காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரை குறிவைத்து இந்தியாவின் முப்படைகளும் மேற்கொண்ட நித்தகைக்குள முற்றுகை நடவடிக்கை தொடர்பில் பல தகவல்களை ஆராய்கின்றது இன்றைய ‘உண்மையின் தரிசனம்’நிகழ்ச்சி,




