இலங்கை–இங்கிலாந்து மோதல்: இலங்கை வீரரை பாராட்டிய ப்ரூக்
இலங்கை வீரரை கண்டு மிரளும் இங்கிலாந்து ஹரி ப்ரூக் ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள நிலையில், இலங்கை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க தங்களுக்குப் பெரும் சவாலாக இருப்பார் என இங்கிலாந்து அணித் தலைவர் ஹரி ப்ரூக் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
லீக் சுற்றுப் போட்டி
அத்துடன் பெத்தும் நிஸ்ஸங்க தற்போது மிகச்சிறந்த ஃபார்மில் உள்ளார்.

அவரை ஆரம்பத்திலேயே ஆட்டமிழக்கச் செய்வது எமது அணிக்கு மிக முக்கியமானது" என ப்ரூக் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
லீக் சுற்றுப் போட்டிகளில் இங்கிலாந்து சற்று நிதானமாக விளையாடியதை ஒப்புக்கொண்ட அவர், சூப்பர் 8 சுற்றை ஒரு புதிய தொடராகப் பார்த்து, துணிச்சலாக விளையாடப் போவதாகக் குறிப்பிட்டார்.

போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்புள்ள போதிலும், முழுமையான 20 ஓவர் போட்டிக்குத் தயாராகி வருவதாகவும், ஓவர்கள் குறைக்கப்பட்டால் அதற்கேற்ப வியூகங்களை மாற்றிக்கொள்ளப் போவதாகவும் அவர் கூறினார்.
இலங்கை அணி லீக் சுற்றில் சிறப்பான வெற்றிகளைப் பெற்று நம்பிக்கையுடன் உள்ள நிலையில், இங்கிலாந்து அணி தனது அதிரடி ஆட்டத்தை மீண்டும் நிலைநாட்டப் போராடும்.
கடந்த தொடரில் இலங்கையை இங்கிலாந்து வீழ்த்தியிருந்தாலும், உலகக் கிண்ணப் போட்டி ஒரு புதிய சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனோஜிற்கு பெண் ரெடி, அண்ணாமலை கேட்ட கேள்வி, ஷாக்கான விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri