அமைச்சர்களுக்கு இரண்டு வார கால அவகாசம்!விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
மின் கட்டணங்களை இதுவரை செலுத்தாத அமைச்சர்களுக்கு மின் கட்டணத்தை செலுத்துவதற்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மேலதிகமாக வட்டி சேர்ப்பு
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இல்லங்களை பயன்படுத்திய பல அமைச்சர்கள் மின்சாரக் கட்டணங்களை செலுத்தாமல் உள்ளனர். இவ்வாறு செலுத்தப்படாத தொகை இலட்சக்கணக்கான ரூபாயாக அதிகரித்துள்ளது.இது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
எனவே இதனை கருத்திற்கொண்டு புதிய செயல்முறையொன்றை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் அவர்களது உத்தியோகபூர்வ இல்லங்களை காலி செய்ய மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்ட போதிலும், அந்த காலத்தின் போது வீடுகளுக்கான கட்டணங்கள் செலுத்தப்படவில்லை.
இதன் காரணமாக உத்தியோகபூர்வ இல்லங்களில் செலுத்தப்படாத கட்டணங்கள் மீது மேலதிகமாக வட்டி சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.