பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்! மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
ஏழு,எட்டு மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும் என அச்சத்தை பரப்பி மின் கட்டணத்தை அதிகரிக்க மின்சார சக்தி அமைச்சர் முயற்சிப்பதாகவும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எக்காரணம் கொண்டும் அதற்கு அனுமதி வழங்காது எனவும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மின் கட்டண அதிகரிப்பு
இலங்கை மின்சார சபை குறிப்பிடும் மின் கட்டண திருத்தம் இதுவரை எமக்கு கிடைக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தற்போதைய தரவுகளின்படி மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் வரை மூன்றாவது நபருக்கு மின்சார கட்டணத்தை அதிகரிக்க வாய்ப்பளிக்காது எனவும் தெரிவித்துள்ளார்.