இலங்கை மின்சார சபைக்குள் கறுப்பு ஆடுகள்! பொறியியலாளர் சங்கம் குற்றச்சாட்டு
இலங்கை மின்சார சபைக்குள் கறுப்பு ஆடுகள் செயற்படுவதாக மின்சார சபையின் பொறியியல் அத்தியட்சகர்கள் சங்கம் பரபரப்புக் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் இயந்திரவியல் மற்றும் சிவில் பொறியியலாளர்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு பொறியியல் அத்தியட்சகர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சதிநாசகார வேலைகள்
அண்மையில் லக்ஷபாண நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களின் பின்னணியில் சதிநாசகார வேலைகள் இருப்பதாகவும் அவை தொடர்பில் சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறித்த சங்கத்தினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மின்சார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க திங்கட்கிழமை இரண்டு மணித்தியாலங்களும் இருபது நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.