இலங்கைத்தீவின் தேர்தல் குழப்பமும் இனப்படுகொலை சொல்லும் செய்தியும்

Tamils Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By T.Thibaharan Jun 07, 2024 07:08 AM GMT
T.Thibaharan

T.Thibaharan

in கட்டுரை
Report

இலங்கை தீவு ஜனாதிபதி தேர்தலையும் அதனை அடுத்து நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலையும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இலங்கையின் உள்ளக அரசியலில் பெரும் தேர்தல் குழப்ப நிலை ஒன்று சேர்க்கையாக தோற்றுவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு ஒரு செயற்கையான தேர்தல் குழப்பநிலையை உருவாக்குவது சிங்கள ஆளும் உயர்குழாமின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய இலங்கை அரசியலை வழி நடத்துவதற்காகவே என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள. வேண்டும். 

ஈழத்தமிழர் மீதான ஒடுக்குமுறையும், அதற்கு எதிரான ஈழத்தமிழர் மேற்கொண்ட ஆயுதப் போராட்டத்தின் எதிர்மறை விளைவுதான் கொழும்பு கிளர்ச்சி எனப்படுகின்ற "அறகலய போராட்டம்". இந்த அறகலய போராட்டம் தாம் எடுத்த இலக்கை அடையவில்லை.

யாருக்கு எதிராக போராட புறப்பட்டார்களோ அவர்களை வெளித்தோற்றத்துக்கு பதவியில் இருந்து அகற்ற அல்லது வெளியேற்ற முடிந்தது. ஆனால் போராட்ட சக்திகளினால் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியவில்லை. 

சிங்கள மக்களின் ஆதரவு

அவ்வாறு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான அல்லது நிர்வகிப்பதற்கான எந்த முன் ஆயத்தங்களும் இவர்களிடம் இருந்ததில்லை. இதனை தத்துவார்த்த ரீதியில் சொன்னால் லும்பன் குழுக்களின் கிளர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும். இவர்களால் எதனையும் அழிக்கமுடியும், குழப்பமுடியும் ஆனால் எதனையும் ஆக்க முடியாது.

srilanka-election-genocide-message

இத்தகைய கிளர்ச்சிகளினால் எந்தப் பயனையும் அடைய முடியாது. மாறாக “குளத்தை கலக்கி பருந்துக்கு இரையாக்கும்“ விளைவையே இது தந்திருக்கிறது. 

ராஜபக்சக்களை தற்காலிகமாக பதவியிலிருந்து அகற்ற முடிந்ததை தவிர அவர்களுடைய அதிகாரத்தையோ அல்லது இலங்கை அரசியலில் அவர்கள் வகிக்கின்ற பங்கையோ, பாத்திரத்தையோ அகற்ற முடியவில்லை. பௌத்த சிங்கள மக்களின் ஆதரவையும் பெருமளவில் குறைக்க முடியவில்லை. 

மாறாக இந்த "அறகலய" போராட்டத்தை முன்னெடுத்த ஜே.வி.பி யினரும், சஜித் ஆதரவாளர்களும் ராஜபக்சக்களை எதிர்த்ததன் பெயரால் இவர்களுக்கு எதிர் நிலையில் இருந்த போராட்டக்காரர்களால் சற்றும் விரும்பாத ரணில் விக்ரமசிங்கவை ராஜபக்சக்களுடன் இணைத்து அவர்களைப் பலப்படுத்தியிருக்கிறார்கள். 

ராஜபக்சக்களுக்கு சர்வதேச ரீதியாக இனப்படுகொலை, மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்பவற்றின் பெயரால் பலவீனமான ஒரு பக்கம் இருந்தது. அந்த பலவீனத்தை பயன்படுத்தி அவர்களை அதிகாரத்திலிருந்து வெளியேற்ற எடுத்த முயற்சியின் மறுவிளைவுதான் மேற்குலகத்தால் விரும்பப்படுகின்ற ரணில் விக்ரமசிங்கவை ராஜபக்சக்கள் தமது காவலனாக, கேடயமாக பயன்படுத்தி அவரை சிம்மாசனத்தில் அமர்த்தி தங்களுடைய அதிகாரத்தையும் ஆளுமையும் தக்க வைத்துக் கொண்டுள்ளார்கள். 

அறகலய போராட்ட விளைவு

"நான்கு கழுதை, புலிகள், சிங்கத்தை சூழ்ந்து நிற்கின்ற போது சிங்கம் பின்வாங்கி ஓடி தனது காட்டு ராஜா பதவியை தொடர்ந்து தக்க வைக்கும்" என்பதற்கிணங்க இதைத்தான் ராஜபக்சக்கள் செய்தார்கள். இப்போது ரணிலின் முகமூடியுடனும், கவசத்துடனும் அதிகார மையத்தில் அமர்ந்திருக்கிறார்கள் என்று சொல்வதுதான் பொருத்தமானது.

srilanka-election-genocide-message

இங்கே இலங்கைத் தீவின் சிங்கள பௌத்த ஆளும் உயர் குழாம் ஓரணியில் நிறுத்தப்பட்டு விட்டது. அப்படியானால் சிங்கள ஆளும் குழாம் சமமாகவும், அதிகாரங்களையும், நலன்களையும் பங்கு போட்டுக் கொண்டிருக்கிறது என்பதுதான் அறகலய போராட்டம் வெளிப்படுத்திய விளைவாகும்.

ரணிலை சிம்மாசனத்தில் அமர்த்தியதன் மூலம் தற்காலிகமாக இலங்கையில் ஏற்பட்டிருந்த எரிவாயு, பெற்றோல், டீசல் போன்ற அன்றாட பாவனை பண்டங்கள் தடையின்றி கிடைக்கக்கூடிய நிலைமை தோன்றியது என்பது உண்மைதான்.

ஆனாலும் ரணில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் எந்தப் பங்கையும் இங்கே வகிக்கவில்லை. உற்பத்தி அதிகரிக்கவில்லை. மாறாக ராஜபக்சக்கள் இருந்த காலத்தில் இருந்த கடனைவிட தற்போது மேலும் கடன் சுமை அதிகரித்துள்ளது.  

இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் சுவாலைவிட்டு எரிந்த வாழ்வாதாரப் பிரச்சினை என்ற பெருநெருப்பு ரணில் என்ற இரும்பு கவசத்தினால் தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

எதிர்காலத்தில் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் ஒருவேளை ராஜபக்சக்கள்-ரணில் எதிர்ப்பாளிகள் நினைப்பது போல ரணிலை விடுத்து மாற்று ஒருவர் வெற்றி பெற்றால் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு பொருளாதார நெருக்கடியின் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியும் என்பது திண்ணம்.  

ஜனாதிபதி தேர்தல்

ஆனால் இங்கே வெல்லப்போவது அல்லது இந்த சிம்மாசனத்தில் குறிப்பிட்ட காலம் அமர்ந்திருக்கப் போவது ரணில் விக்ரம்சிங்க என்பதனால் மேற்குலகத்துடனும், சீனாவுடனும், இந்தியாவுடனும் அவர்களுக்கு ஏற்ற வகையில் குட்டைப் பாவாடை அணிந்து, நல்ல நடனமாடி வசூல் பண்ணுவதற்கு ரணிலை விஞ்சிவிட இலங்கை தீவில் வேறெந்த தலைவரும் கிடையாது. 

இன்று இலங்கைத் தீவின் தேர்தல் அரசியலில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது என்ற முடிவை அண்மித்திருக்கிறார்கள். இந்நிலையில் இவ்வாறு ஒரு பொது வேட்பாளரை தமிழர்கள் நிறுத்தினால் சிங்கள தேசத்தின் தலைவர்கள் யாரும் இந்தத் தேர்தலில் 50% மேலான வாக்குகளை பெறமுடியாது.

srilanka-election-genocide-message

ஆனாலும் அறகலய போராட்டத்தின் பின் தமக்கு ஏதோ பெரும் மக்கள் ஆதரவு பெருகிவிட்டது என்று அனுரகுமார திசாநாயக்காவும், சஜித் பிரேமதாசாவும் கற்பனை செய்து கொண்டு இலங்கையின் ஜனாதிபதி நாற்காலியில் மணிமுடி தரித்து தாங்கள்தான் அமரப்போவதாக கனவு காண்கிறார்கள்.

அதேவேளை ராஜபக்சக்களுக்கு எதிரான மேற்குலகம் ரணிலை ஆதரிக்கின்றனர் என்ற ஒரு மென்மையான பக்கம் மாத்திரமே அரசியலில் ராஜபக்ச - ரணில் கூட்டுக்கு உண்டு.

இதனை அவர்கள் தமக்குச் சாதகமாக பயன்படுத்தும் வல்லமையும் சக்தியும் பெற்றவர்களாகவும் உள்ளனர். 

மறுவளத்தே அனுரகுமாராவோ, சஜித்தோ மேற்குலகத்தால் பெரிதும் விரும்பப்படவில்லை என்பது மாத்திரமல்ல சிங்கள சமூகத்திலும் அவர்களுக்கான அங்கீகாரமும் ஆதரவும் மிகக் குறைவானதே.

குறிப்பாக சொல்லப் போனால் சிங்கள தேசத்தின் சாதிபேத அரசியலில் மேற்குறிப்பிட்ட இரு அணியினருக்கும் சாதிய ரீதியான குறிப்பிட்ட அளவு வாக்குகள் மாத்திரமே உண்டு. அது அவர்களுடைய வெற்றியை தீர்மானிப்பதற்கு போதுமானதல்ல.

பௌத்த மகா சங்கத்தின் ஆதரவு

இவை மாத்திரமல்ல இலங்கை அரசியலில் தலைமைத்துவத்துக்கு வர வேண்டியவர் பௌத்த மகா சங்கத்தின் ஆதரவையும் பெற்றிருக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதி ஒன்று உள்ளது. அந்த அடிப்படையில் பார்த்தால் மகாசங்கம் சஜித்தையோ, அனுரகுமார திசாநாயக்கவையோ இலங்கையின் சிம்மாசனத்தில் அமர்த்துவதற்கு அனுமதிக்க மாட்டார்கள்.

srilanka-election-genocide-message

அவர்கள் எப்போதும் உயர் சாதி உயர்குழாத்தினரையே அந்த நாற்காலியில் அமர்த்த விரும்புவர்.

இது இவ்வாறிருக்கையில் முதலில் ஜனாதிபதி தேர்தலா அல்லது நாடாளுமன்றத் தேர்தலா என்ற விவாதம் ஒருபுறமும், இந்த நாடாளுமன்றத்தையும் ஜனாதிபதி முறைமையும் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்ந்து நீடிப்பதற்கான முன்மொழிவுகளும் இலங்கை அரசியலில் பரவலாக பேசப்படுகிறது.

இந்தக் குழப்ப நிலையை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். தேர்தலில் வெற்றி நிச்சயம் என்று ரணிலோ, ராஜபக்சர்களோ நினைப்பார்களாயின் நிச்சயமாக ஜனாதிபதி தேர்தலில் முதலில் நடைபெறும்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் அதிகாரம் கையில் இருக்கின்ற போது நாடாளுமன்றத் தேர்தலை இலகுவாக வென்றுவிட முடியும். மாறாக பொதுத் தேர்தலை நடத்த முனைந்தால் அதில் ஏற்படுகின்ற தோல்விகள் ஜனாதிபதி தேர்தலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். 

எனவே இப்போது சிங்களதேசம் எடுக்கக் கூடிய ஒரே முடிவு முதலில் ஜனாதிபதி தேர்தல். அதன் பின்னர்தான் பொதுத்தேர்தல் நடத்தப்படும். ஆனாலும் இப்போது இந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற காலத்தை இரண்டு வருடங்களுக்கு மேலும் நீடிக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தெரிகின்றது.

நாடாளுமன்ற புதிய சட்டங்கள்

இந்த முயற்சி சாத்தியப்படக்கூடிய ஒன்றுதான். ஏனெனில் 1982ஆம் ஆண்டு ஜே.ஆர் ஜெயவர்த்தனா 1977ஆம் ஆண்டு தேர்தலில் பெற்ற 74 வீத நாடாளுமன்ற ஆசனங்களை ஒரு கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில் 52வீத வாக்கை பெற்றதன் மூலம் தம்மிடம் ஏற்கனவே இருந்த 74 வீத ஆசனங்களை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டனர்.

srilanka-election-genocide-message

இத்தகைய ஒரு வரலாற்று நடைமுறை எம் கண்முன்னே இருக்கிறது. இந்த அடிப்படையில் ஆளும் குழாம் தமது அதிகார நலன்களையும், அதிகாரத்தையும் தொடர்ந்து தக்க வைப்பதற்கு அரசியலமைப்புக்கு ஊடாகவும், நாடாளுமன்ற புதிய சட்டங்களின் ஊடாகவும் பல்வகைப்பட்ட சித்து விளையாட்டுகளை நடத்தி முடிப்பர்.

அதற்கான வாய்ப்புக்களும் உண்டு என்பது மறுப்பதற்கில்லை. இந்த நடைமுறையை சிங்கள ஆளும் குழாம் கைக்கொள்ள வாய்ப்புள்ளது. 

இன்று ஏற்பட்டிருக்கின்ற தேர்தல் நெருக்கடியும், பொருளாதார நெருக்கடியும் ஈழத் தமிழர் பிரச்சினையை தீர்ப்பதிலேயே மையம் கொண்டுள்ளது. இங்கே ஒட்டுமொத்தமாக கூட்டி கழித்துப் பார்த்தால் தமிழின படுகொலையின் வெளிப்பாடுதான் இலங்கைக்கு ஏற்பட்ட சர்வதேச அழுத்தம்.

இனப்படுகொலையின் வெளிப்பாடுதான் பொருளாதார நெருக்கடி. இனப்படுகொலையின் வெளிப்பாடுதான் அறகலயபோராட்டம். இவ்வாறு இலங்கைத்தீவின் அனைத்து பிரச்சினைகளும் ஈழத் தமிழர்களுடைய அரசியல் பிரச்சினையிலும், இனப்படுகொலையிலும் மையம் கொண்டுள்ளன. 

இனப்படுகொலை

இனப்படுகொலையை நிகழ்த்தி இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்த்து விடலாம் என்று கனவு கண்ட சிங்களப் பேரினவாதத்திற்கு இனப்படுகொலை என்பது ஒரு ஆறாத புண்ணாய், ஆறாத வடுவாய் மாறிவிட்டது. 

இனப்படுகொலை புரிந்த பின்பும் இனப்பிரச்சனையை தீர்க்க முடியவில்லை. இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற எந்த நெருக்கடிக்கும் தீர்வுகாண முடியவில்லை.  

srilanka-election-genocide-message

ஈழத் தமிழர்கள் தமது தலைமைகளினால் எதனையும் சாதிக்க முடியாது என்பதை கடந்த 15 ஆண்டு காலத்தில் உணர்ந்ததன் வெளிப்பாடு தமிழ் தலைவர்களை மீறி சிவில் சமூகமாய் கிளர்ந்து எழுந்து தமக்கான புதிய தலைமைகளை உருவாக்குவதற்கான முயற்சியில் இறங்கிவிட்டனர்.

அதன் வெளிப்பாடுதான் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொது தமிழ் வேட்பாளரை நிறுத்துவது என்ற சிவில் சமூகத்தின் முன்மொழிவாகும்.

இந்த முன்மொழிவின் மூலம் தமிழ் இளைஞர்களே அரசியலில் தலைமை தாங்க முன் வாருங்கள், தமிழ் அறிவியலாளர்களே இளைஞர்களை வழிநடத்த அவர்களின் பின்னே நில்லுங்கள், இளைஞர்களை வழிப்படுத்துங்கள், அறிவியல் பூர்வமாக நாம் ஒரு முன்னேற்ற பாதைக்குச் செல்வோம் என்ற கோஷங்கள் தமிழர் தரப்பில் முன்வைக்கப்பட தொடங்கிவிட்டது.

 காலத்தால் இறந்த தமிழ் தலைவர்களை நல்லடக்கம் செய்துவிட்டு முற்றிலும் புதிய திசையில், முற்றிலும் புதிய மூலோபாயத்துடன் தமிழர் அரசியல் இலங்கைத் தீவில் பயணிப்பதற்கான காலம் கனிந்து கொண்டிருக்கிற நிலையில் இன்றைய ஜனாதிபதி தேர்தல் தமிழ் மக்களின் அரசியலுக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது.

இலங்கைத் தீவில் ஜனநாயகம்

ஈழத் தமிழர் மீது புரியப்பட்ட இனப்படுகொலையின் அடியிலிருந்து எரிமலையாய், அக்கினியாய் கொந்தளிக்கும் கடலாய் இலங்கைத் தீவின் தேர்தல் அரசியல் அலை வீச தொடங்கிவிட்டது.

இந்தப் பின்னணியில் தேர்தல்களை பின்போடலாம், ஆட்சி அதிகார காலத்தை நீட்டலாம், குறைக்கலாம். ஆனாலும் ஈழத் தமிழர்களுக்கான தேசிய அபிலாசையை நிறைவு செய்யக்கூடிய ஒரு தீர்வு கிடைக்கப்பெறாமல் இலங்கை தீவிற்கான நிரந்தரமான சமாதானமும் சகவாழ்வும் வளர்சியும் எட்டப்பட மாட்டாது. இலங்கையின் பொருளாதார மறுசீரமைக்கப்பட முடியாது.  

srilanka-election-genocide-message

ஈழத் தமிழர்களுக்கு தீர்வில்லையேல் இலங்கைத் தீவில் ஜனநாயகம் மீட்டெடுக்க முடியாது. சமாதானத்தை கொண்டுவர முடியாது. இந்து சமுத்திர பிராந்தியத்தில் அமைதி ஏற்படாது.

வல்லரசுகளின் வேட்டைக்களமாகவே இந்து சமுத்திர பிராந்தியம் தொடர்ந்து நிலை பெறுவதற்கான வாய்ப்புகளையே தோற்றுவிக்கும்.

ஆதலால் அறிவார்ந்து நோக்குகையில் இனப்படுகொலை அரசியலில் இருந்தே இலங்கையின் இன்றைய அனைத்து நெருக்கடிகளூம் எழுந்துள்ளன என்பதுடன் அதற்கான நியாயபூர்வமான தீர்வில் இருந்தே எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்பதே உண்மை. 

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 07 June, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வல்வெட்டித்துறை

16 Jul, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Markham, Canada

28 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, London, United Kingdom

03 Jul, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

02 Jul, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இளவாலை, Scarborough, Canada

25 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு

02 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
13ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கிளிநொச்சி

01 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US