காலந்தாழ்த்திய செயற்பாட்டினால் நாடு வீழ்ச்சி!- பொருளாதார நிபுணரின் கடும் விமர்சனம்!
இலங்கை மத்திய வங்கி, அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியை 2020ஆம் ஆண்டு ஆரம்பத்தில் மதிப்பிறக்கம் செய்திருந்தால், இன்று நாட்டில் 5 மில்லியன் டொலர்களை வெளிநாட்டு ஒதுக்கங்களாக வைத்திருக்கக்கூடியதாக இருந்திருக்கும் என்று பொருளாதார நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் முன்னாள் பிரதிப்பணிப்பாளர்- டபில்யயூ .ஏ. விஜயவர்த்தனவின் இந்த கருத்தை சிங்கள நாளிதழின் ஆசிரியர் தலையங்கம் கோடிட்டுள்ளது.
நாட்டில் டொலரின் பெறுமதியை அரசாங்கம் கட்டுப்படுத்தாமல், அதனை மிதக்கவிடவேண்டும் என்று முன்பிருந்தே கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன.
எனினும் அரசாங்கம் அதனை மேற்கொள்ளவில்லை.
எனினும் கடந்த வாரத்தில் 203 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலர் ஒன்றுக்கான ரூபா பெறுமதியை , அரசாங்கம் குறைத்துள்ளமை காரணமாக தற்போது ரூபாவின் பெறுமதி 260 ரூபாவாக உயர்ந்துள்ளதாக விஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதியை குறைத்த நடவடிக்கை 1970-77 ஆண்டுக் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.
அன்றைய நாளில் அரைக்கால் என்று கூறப்படுகின்ற 8இல் ஒரு பங்கினால் ரூபாவின் பெறுமதி குறைக்கப்பட்டது.
இதேவேளை டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியை குறைப்பதன் காரணமாக ஏற்றுமதியை அதிகரித்து இறக்குமதியை குறைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கமுடியும்.
அத்துடன் வெளிநாட்டில் பணிபுரிவோர் தமது டொலர்களுக்கு அதிக ரூபா பெறுமதி கிடைப்பதால், அதிகளவான டொலர்களை இலங்கைக்கு அனுப்பிவைப்பார்கள் என்றும் விஜயவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.





ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
