கடன் வழங்கும் நாடுகளிடம் இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் விடுத்துள்ள கோரிக்கை
சீனா போன்ற பெரிய கடன் வழங்கும் நாடுகள் இலங்கை போன்ற நாடுகளுக்கு கடன் நிவாரணத்தை வழங்குவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச நாணயநிதியத்தின் (IMF) தலைவர் கிறிஸ்டினா ஜோர்ஜிவா (Kristalina Georgieva) வலியுறுத்தியுள்ளார்.
தனது இந்திய விஜயத்தின் போது ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைத்த அவர், வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரங்களில் சுமார் 25% பேராபத்தில் இருப்பதாகவும், இலங்கை நீண்ட காலமாகவே இப்படிப்பட்ட நிலையிலேயே இருப்பதாகவும் கூறியுள்ளார்.

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் 60% க்கும் அதிகமான நாடுகள் இதன் காரணமாக ஆபத்தை எதிர்நோக்குகின்றன. வலுவான அடிப்படைகளைக் கொண்ட நடுத்தர வருமான நாடுகள் கூட மோசமான சூழ்நிலையில் விழுந்துள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடன் வழங்கும் நாடுகள்
வலுவான அடிப்படைகளைக் கொண்ட நாடுகள் கூட பாதிக்கப்படக்கூடியவை என்று அவர் கூறினார். எனவே, இதில் இருந்து கற்க வேண்டிய பாடங்களாக , விவேகமான நிதிக் கொள்கைகள் மற்றும் அதிர்ச்சிகளைத் தாங்கும் திறனை உருவாக்குதல் ஆகியவை அமைந்துள்ளன என்றும் ஜோர்ஜீவா கூறியுள்ளார்.

இந்தநிலையில் சீனா போன்ற பாரிய கடன் வழங்கும் நாடுகள், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு, இந்த அதிர்ச்சிகளின் சூழலில், தலைமைத்துவத்தைக் காட்டவேண்டும்.
மேலும் இந்த நாடுகளுக்கு கடன் நிவாரணம் வழங்க விரைவாக முன்னெடுப்பை மேற்கொள்ள
வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைவர் கிறிஸ்டினா ஜோர்ஜிவா
(Kristalina Georgieva) வலியுறுத்தியுள்ளார்.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri